காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை, கபினியிலிருந்து 1300 கனஅடி, கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 700 கனஅடி என 2000 கனஅடி தண்ணீர் நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது.
அந்த அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் இரண்டு நாள்களுக்குப் பிறகு தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு இன்று (ஜூலை 11) வந்தடைந்தது.
கடந்த சில தினங்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 500 கனஅடியாக வந்துகொண்டிருந்தது. தற்போது நீர்வரத்து ஆயிரம் கனஅடி அதிகரித்து 1500 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணைக்குச் செல்லும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. நாளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடவுள்ளார்.