கடந்த எட்டு ஆண்டுகளாக கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி செய்யமுடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன்12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த இறையான்குடி கிராமத்தின் பாண்டவையாற்றின் தடுப்பணைக்கு வந்து சேர்ந்தது.
கதவணைக்கு ஆர்ப்பரித்து வந்த காவிரி நீரை பொதுமக்களும், விவசாயிகளும் மலர், நெல்மணிகள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். மேலும் பெண்கள் கும்மி அடித்தும், பாடல்களை பாடியும் உற்சாகமாக காவிரி நீரை வரவேற்றனர்.