கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருபவர் மேரி சுஜி (32). இவரது கணவர் ததாயூஸ் (35). இவர்களுக்குச் சென்ற 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார்.
திருமணத்தின்போது மூன்று லட்சம் ரொக்கம், 30 பவுன் தங்க நகைகள் , 2 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டது. திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே மேரி சுஜி இடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ததாயூஸ் கொடுமைப்படுத்தியுள்ளார்.
இது குறித்து மேரி சுஜி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் ததாயூஸை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்துள்ளனர். பின்னர் தொழில் தொடங்க இரண்டு லட்சம் ததாயூஸ் கேட்டு உள்ளார். ஆனால் மேரி சுஜி 1.50 லட்சம் பணம் கொடுத்துள்ளார். மேலும் பணம் கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இது குறித்து ததாயூஸ் குடும்பத்தினரிடம் மேரி சுஜி தெரிவித்தும் அவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மேரி சுஜி புகார் அளித்தார். அதன்படி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சாந்தகுமாரி, ததாயூஸ், அவரது தாயார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
பெண் காவலரிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவர் மீது வழக்குப்பதிவு - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பெண் காவலரிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவர், அவரது தாயார் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.