ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணியாற்றும் அரசு பணியாளர்கள் அரியலூரிலிருந்து சுமார் 30க்கும் மேற்பட்டோர் தினமும் சென்று வருவது வழக்கம். அவர்களுக்கு அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டது. இந்நிலையில் ஊழியர்கள் குறைவாக வருவதாக கூறி இன்று(ஜூலை 23) அறிவிப்பு இல்லாமல் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனை அறியாத ஊழியர்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். பின்னர் விசாரித்தபோது இது குறித்து தெரிய வந்துள்ளது.
அடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுப்பதற்காக காத்திருந்தனர். எந்தவித அறிவுறுத்தல்களும் இல்லாமல் நீதிமன்ற பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் ஊழியர்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர்.