ETV Bharat / briefs

பிகாரில் இடி தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்! - முதலமைச்சர் நிதிஷ் குமார்

பாட்னா: பிகாரில் இடி தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

bihar-lightning-death-toll-reaches-92-cm-announces-rs-4-lakh-ex-gratia

author img

By

Published : Jun 26, 2020, 11:17 AM IST

பிகாரில் இடிதாக்கி 92 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்தது, இதில் அதிகபட்சமாக கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இடி தாக்கி இறந்தவர்களில் பெரும்பாலோர் வயல்களில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

பிகாரில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன்கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இடிதாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

"உத்தரப் பிரதேசம், பிகாரில் இடி தாக்கி பலர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தைத் தருகிறது. இரு மாநிலங்களிலும் நிவாரணப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்தப் பேரழிவில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் ”என்று உள் துறை அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில், பிகாரில் இடி தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.