கரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
இந்த நிலையில் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பெரும் ஆர்வம் காட்டினார்கள்.
அந்த வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் குடிபெயர்ந்த தொழிலாளர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார். அதன்படி அவர் 6 விமானங்களில், ஆயிரம் குடிபெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பியுள்ளார்.