உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில், வங்கதேச அணி, ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடிவருகிறது. சவுதாம்ப்டனில் நடைபெறும் இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில், லிட்டான் தாஸ், தமிம் இக்பால் சொதப்பினாலும், ஷகிப்-அல்-ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.
ஷகிப் 51 ரன்களுடன் நடையைக் கட்டினாலும், மறுமுனையில், அபாரமாக ஆடிய முஷ்ஃபிகுர் ரஹிம் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் வங்கதேச அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜிப்-உர்-ரஹ்மான் மூன்று, கேப்டன் குல்பதின் நைப் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.