ETV Bharat / briefs

'இம்ப்ரோ' சித்த மருத்தை பரிசோதித்து ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு...! - AYUSH Ministry must test and submit report on 'Impro' siddha medicine

மதுரை : கரோனாவுக்காக சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இம்ப்ரோ எனும் மருத்துவப் பொடியை மத்திய அமைச்சகம் பரிசோதித்து, அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கரோனாவுக்கான சித்த மருத்தை பரிசோதித்து ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை வெளியிட உத்தரவு!

author img

By

Published : Jul 8, 2020, 12:01 AM IST

மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "நாடு முழுவதும் கரோனா நோய் தொற்றால் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் கரோனா நோய் தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனா தொற்று நோயிக்காக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது.

சீனாவில் அவர்களின் பாரம்பரிய மருத்துவ முறையை பின்பற்றுவதாகவும், அதன் காரணமாகவே அங்கு நோய்தொற்று பரவல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

66 வகையான சித்த மருத்துவப் பொருள்களைக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மருத்துவ பொடி ஒன்றை தயார் செய்துள்ளேன். இது உடலுக்கு எவ்விதமான எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தாது.

இது குறித்து அரசு அலுவலர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலமாக தெரிவித்த நிலையில் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. ஆகவே, சித்த மருத்துவத்தின் அடிப்படையில் கரோனாவிற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் இம்ப்ரோ (IMPRO) எனும் மருத்துவப் பொடியை வைராலஜி நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளை அறிவிக்க ஆயுஷ் அமைச்சகத்தின் செயலருக்கு உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.

இவ்வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று (ஜூலை.7) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பினை வெளியிட்ட நீதிமன்றம், " சித்த மருத்துவத்தைக் கைக்கொள்ள தமிழ்நாடு அரசு ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது. அதனடிப்படையில், சித்த மருத்துவ முறையில் கரோனாவிற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO எனும் மருத்துவப் பொடியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிசோதித்து, அது குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், இந்திய மருத்துவம் தொடர்பான மருந்துகளை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என தெரியவருகிறது. ஆகவே, இந்தியாவின் மரபு மருத்துவமுறைகளை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்குவது குறித்தும், மருந்துகளை ஆய்வு செய்து அது தொடர்பான விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, சாதாரண மனிதரும் பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.