திருவாரூர் மாவட்ட ஏஐயுடியூசி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனு கொடுக்கும் போராட்டம் இன்று மன்னார்குடியில் நடைபெற்றது.
இதில், நலவாரியத்தில் பதிவு பெற்ற, பதிவு பெறாத அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் நல வாரியத்தின் மூலமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு பெற்ற அனைத்து ஆட்டோக்களுக்கும் கரோனா நிவாரணமாக 7ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும்.
ஊரடங்கு காலங்களில் காலாவதியான எஃப்.சி, இன்சூரன்ஸ், ஓராண்டு காலம் நீட்டிப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி கோட்டாசியர் அலுவலக வாயிலில் ஆட்டோ தொழிலாளர்கள், கைகளில் மண் சட்டிகளை ஏந்தி பிச்சை எடுத்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கோட்டாட்சியர் புண்ணியகோடியிடம் முதலமைச்சருக்கான கோரிக்கை மனுவை அளித்தனர்.