ETV Bharat / briefs

பெண்ணின் தங்க நகை பறிக்க முயன்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு! - Thirunelveli Chain Snatching

திருநெல்வேலி: கோலம் போட்ட பெண்ணிடம் தங்க நகையைக் கொள்ளையர்கள் பறிக்க முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Attempt to snatch chain from grandmother in Thirunelveli

author img

By

Published : Aug 2, 2020, 11:37 PM IST

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையை அடுத்துள்ள காந்திநகரைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவரின் மனைவி செல்வரத்தினம் (57). இவர் இன்று காலை தனது வீட்டு முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் செல்வரத்தினம் கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தங்க நகையைப் பறிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், செல்வரத்தினம் நகையை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் நகையை அவர்களால் பறிக்க முடியவில்லை.

அவரின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் நடராஜன் அந்த நபர்களைத் துரத்தியுள்ளார். அப்போது கொள்ளையர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மிரட்டிவிட்டு, இருசக்கர வாகனத்தில் மூன்று கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பேட்டை காவல் நிலையத்தில் செல்வரத்தினம் புகார் அளித்தார். இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், கொள்ளையர்கள் நடராஜனை அரிவாளால் மிரட்டிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதை அடிப்படையாகக் கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.