அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் இலவச மின்சார உரிமை பாதுகாப்பிற்கான விவசாயிகள் சங்கங்களின் கூட்டியிக்கம் சார்பில் விவசாய சங்க பிரதிநிதிகள் மனு அளித்துள்ளனர்.
அம்மனுவில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உடனே உரிய பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார உரிமையை தொடர்ந்து காப்பாற்றிட வேண்டும். தக்கல் திட்டத்தில் மின் இணைப்பு பெறுவதற்கு ஒரு குதிரை திறனுக்கு 20ஆயிரம் ரூபாய் வைப்புத்தொகை கட்டவேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை ரத்து செய்து கட்டணமில்லாமல் மின் இணைப்பு பெறும் வகையில் தமிழ் நாடு அரசு உத்திரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த இந்திய விவசாயிகள் சங்க மாநிலச்செயலாளர் ராஜேந்திரன், ''மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்தியஅரசும், குதிரைத்திறனுக்கு 20ஆயிரம் ரூபாய் வைப்புத்தொகை என்ற மாநில அரசின் உத்திரவுகளை ரத்துசெய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் விவசாயிள் அனைவரும் இனணந்து நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்று தெரிவித்தார்.