கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் அரசம்பட்டு கிராமத்தில் உள்ள கால்நடைகள் ஆந்த்ராக்ஸ் என்னும் அடைப்பான் நோயின் காரணமாக தொடர்ந்து உயிரிழந்து வந்தன. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கிரண் குர்ராலா கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, உதவி இயக்குநர் மருத்துவர் பெரியசாமி, கால்நடை உதவி மருத்துவர் பாலாஜி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சோழம்பட்டு, நெடுமானூர், சேஷசமுத்திரம், ஆகிய கிராமங்களில் உள்ள அனைத்துக் கால்நடைகளுக்கும், ஆந்த்ராக்ஸ் நோய்த்தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு ஊசி போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முழு ஊரடங்கில் சட்ட விரோதமாக மது விற்பனை - இருவர் கைது!