ETV Bharat / briefs

கரோனா பாதிப்பு: கம்பத்தில் ஜூலை 25ஆம் தேதி வரை கடைகள் திறக்கத் தடை! - கடைகள் அடைப்பு

தேனி: கம்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் ஜூலை 12 முதல் 25ஆம் தேதி வரையில் அத்தியாவசியக் கடைகள் உள்பட அனைத்து வணிகக் கடைகள், வங்கிகள் திறப்பதற்குத் தடை விதித்து நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Stores closed
Stores closed
author img

By

Published : Jul 10, 2020, 7:58 AM IST

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் கரோனா தொற்றால் இதுவரை சுமார் 120க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் வருகின்றனர். மேலும், இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக கம்பம் நகராட்சி ஆணையாளர் தலைமையில், சுகாதாரம், வருவாய், காவல் துறையினர் ஆகியோர் வணிகர்களுடன் நேற்று (ஜூலை 9) ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், கம்பம் நகராட்சிப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் விற்பனையகங்கள், ஏடிஎம் உள்ளிட்டவைகளைத் தவிர்த்து, மற்ற அனைத்துக் கடைகளும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

காய்கறி, மளிகை, உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் உள்பட அனைத்துக் கடைகளும் வருகின்ற ஜூலை 12 முதல் 25ஆம் தேதி வரையில், திறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு வணிகர்கள் சம்மதம் தெரிவித்து, முழு ஆதரவு அளித்தனர்.

நகராட்சியின் அறிவிப்பை மீறி, தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் ஆண்டிபட்டி, போடி பகுதிகளைத் தொடர்ந்து தற்போது கம்பம் நகர் பகுதியும் தடை செய்யப்படவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.