இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் வசிக்கும் பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எந்தவித தாமதமின்றி உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் இதுவரை 32 ஆயிரத்து 300 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், இதுவரை ஆயிரத்து 281 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 400 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏதாவது குறிப்பிட்ட பகுதியில் ஐந்து பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிந்தாலே அப்பகுதியில் உள்ள 50 முதல் 100 நூறு பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காய்ச்சல் மட்டுமின்றி இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் இருந்தாலே அவர்களுடைய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் கரோனா சோதனை அதிகப்படுத்துவதற்காக மேலும் ஒரு ஆர்டிபிசிஆர் ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் சளி, இருமல், தும்மல் போன்றவற்றிக்காக சிகிச்சை பெறுபவர்களை தொடர்ந்து கண்காணிப்பதற்க்காக தனி மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளன.
தாலுகா அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களுக்கு கரோனா தொற்றிற்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக அதற்கான சிகிச்சையை தொடங்க முன்வரவேண்டும். காலதாமதப்படுத்துவது சிகிச்சை அளிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்" என்றார்.
இதையும் படிங்க: 'தங்கக் கடத்தல் வழக்கு... முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து ரகசிய அழைப்பு' - முதலமைச்சர் செயலர் திடீர் பதவி நீக்கம்