ETV Bharat / briefs

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிச்சையெடுக்கும் போராட்டம்!

திருவாரூர்: தமிழ்நாடு அரசின் பணியிடங்களைத் தமிழ்நாடு இளைஞர்களுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

aiyf youngers begging protest in thiruvarur

author img

By

Published : Sep 29, 2020, 6:07 AM IST

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் அருள்ராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பிச்சையெடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழ்நாடு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலை வழங்கி உழைப்புக்கேற்ற ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வேலை இல்லா காலத்தில் நிவாரணம் வழங்கிட வேண்டும்.

மேலும் தமிழ்நாடு அரசு ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அரசுப் பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தப்பட்டதை திரும்ப பெற வேண்டும்.

நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையில் திருவோடு வைத்துக்கொண்டு பிச்சை எடுத்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.