ETV Bharat / briefs

விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற்று பயன்பெற வேண்டும்: வேளாண் இயக்குநர்!

நாகை: விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற்று பயன்பெற வேண்டுமென்று வேளாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

Agricultural Director DakshInamoorthy Press Meet

author img

By

Published : Jul 17, 2020, 11:01 PM IST

நாகை, மயிலாடுதுறையில் சென்னை வேளாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மயிலாடுதுறை வேளாண்மை விரிவாக்க மையத்தில் சாகுபடிக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகள், நுண்ணூட்ட உரங்கள், பயிர் ஊக்கிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது ஒரு லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் இருப்பு உள்ளது. குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு வரும் 31ஆம் தேதி கடைசிநாள் அதற்குள்ளாக பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் இதுவரை பெறாதவர்கள் ஆதார் கார்டு, வங்கி பாஸ் புத்தகத்துடன் சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநரை அணுகினால் பணம் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள்.

வங்கிகளில் விவசாய நகைக்கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயம் சம்பந்தமான கடன்பெறுவதற்கு மத்திய அரசு கிசான் கடன் அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்தந்தப் பகுதியில் கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கிசான் கடன் அட்டையை விவசாயிகள் பெற்றுக்கொண்டால் எந்தவித ஷ்யூரிட்டியுமின்றி ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்வரை விவசாயிகள் கடன்பெறலறாம். கூட்டுபண்ண திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 36 குழுக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சொட்டுநீர் பாசனம், நீர்மேலாண்மை திட்டங்களுக்கு அரசு பல்வேறு மானியங்கள் வழங்கி வருகிறது அதனை விவசாயிகள் பயன்படுத்தி பலன்பெற வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்ல பாதை இல்லை - பொதுமக்கள் கவலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.