ETV Bharat / briefs

13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழாய்வு நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் நியமனம்! - செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்

ஈரோடு : செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக ஈரோட்டைச் சேர்த்த தமிழ்ப்பேராசிரியர் சந்திரசேகரன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழாய்வு நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் நியமனம்

author img

By

Published : Jun 2, 2020, 9:28 PM IST

மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாக விளங்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாக இயக்குநர் பதவி நிரப்பப்படாமலேயே இருந்தது. இதன் காரணமாக இந்திய அளவில் தமிழ் மொழியில் மேற்கொள்ளும் ஆய்வுகளில் தொய்வு ஏற்பட்டதால் அதன் இயக்குநர் பதவியிடத்தை நிரப்பக் கோரி தமிழ்நாடு அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் சந்திரசேகரன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக இன்று பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்ப்பேராசிரியர் சந்திரசேகரன் ஈரோடு மூலப்பாளையம் நேதாஜிநகர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தமிழ்ச்சங்கம், பழங்குடிகள், சங்ககால இலக்கியத்தில் தமிழ் மொழி என பல்வேறு ஆராய்ச்சிக்களை மேற்கொண்டு அதில் முனைவர் பட்டத்தைப் பெற்றவராவார். தமிழில் பல்துறை நூல்களை பல்வேறு தலைப்புகளில் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரின் விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், தேசிய மற்றும் மாநில அளவில் தமிழ் மொழியில் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

அதேபோல் இந்தியா உள்பட வெளிநாடுகளில் தமிழ் மொழி குறித்த சிறப்புச் சொற்பொழிவுகளையும் ஆற்றி தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய பேரா.சந்திரசேகரன், "தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வரும் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பு ஏற்றிருப்பது பெருமை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

உலகளவிலுள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட போகிறேன். மேலும், தமிழ்மொழியில் தொய்வு ஏற்பட்டுள்ள ஆய்வுகளை மேம்படுத்துவதற்கு அதிக நிதிகளைப் பெற்றுத் தந்து தமிழ்ப்பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்தி தாய்மொழியாம் தமிழுக்கு பெரும் புகழைச் சேர்க்கும் பணியில் ஈடுபடப்போகிறேன். உலகம் முழுவதும் தமிழ்வழி கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தி உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் வருங்காலத் தலைமுறையினருக்கு தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

தன்னாட்சி நிறுவனமாக செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் மூலம் தமிழ்மொழியின் பாரம்பரியம், பண்பாட்டு மேன்மையை உலகுக்கு உணர்த்துவதற்குரிய முயற்சிகளும் எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சந்திரசேகரனுக்கு தமிழ்நாடு முழுவதுமிருந்து வாழ்த்துகளும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணமுள்ளது.

இதையும் படிங்க :

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.