கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக படப்பிடிப்பு நடைபெறாததால் நடிகர், நடிகைகள் தங்கள் வீட்டில் செய்துவரும் வேலைகள் குறித்து அவ்வப்போது தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.
அந்தவகையில் நடிகை சமந்தா மாடித்தோட்டம் அமைத்துள்ளதாகவும் அது தனது பொழுதுபோக்காக மாறிவிட்டதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "48 நாள்கள் ஈசா கிரியா யோகம் செய்யப்போகிறேன். தியானம் செய்தால் மனம் அமைதியடைவதுடன், முகம் பொலிவாகும். அகமும் தெளிவாகும். அதனால் அனைவரும் தியானம் செய்யுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
அவருடன் அவரது நாய், 'hashum' கண்ணை மூடி யோகாசனம் செய்வது போல் அமர்ந்திருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.