ETV Bharat / briefs

திருமணம் குறித்து பரவிய செய்தி: ஹன்சிகா விளக்கம்

author img

By

Published : Jun 13, 2020, 10:35 AM IST

நடிகை ஹன்சிகா தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக வெளியான செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஹன்சிகா
ஹன்சிகா

நடிகர்கள், நடிகைகள் திருமணங்கள் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டுவருகின்றன. இது ஒருபோதும் முடிவடையாத கதையாகவே இருக்கிறது.

அந்தப் பட்டியலில் புதிதாக நடிகை ஹன்சிகா மோத்வானி இணைந்துள்ளார். அவர் ஒரு தொழிலதிபரை விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகச் சமீபத்தில் செய்திகள் பரவின.

இருப்பினும் இச்செய்தியை ஹன்சிகா உறுதிசெய்யாததால் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து ஹன்சிகா விளக்கம் அளித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "குப்பை! ஓ மை காட் யார் அந்த நபர்?" என்று குறிப்பிட்டார். இதன்மூலம் ஹன்சிகாவிற்கு தற்போது திருமணம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.