ETV Bharat / briefs

'கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்' - சாத்தன்குளம் விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன் ட்வீட் - Latest cinema news

சென்னை : சாத்தன்குளம் விவகாரம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
author img

By

Published : Jun 29, 2020, 4:31 PM IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரபலங்கள் பலரும் இச்சம்பவத்திற்கு எதிராக தங்களது கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் பதிவு
சிவகார்த்திகேயன் பதிவு

அதில், "இந்தக் கொடூர குற்றத்தின் பின்னால் இருப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் நம் அனைவருக்கும் அரசாங்கம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.