ETV Bharat / briefs

ஆடி மாத உழவுப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்! - Aadi Month Ulavu Panikal

தருமபுரி: ஆடி மாத ஒன்றாம் தேதி, இன்று பிறந்ததை ஒட்டி, விவசாயிகள் உழவுப் பணியில் ஈடுபட்டனர்.

Aadi month plowing begins in Dharmapuri
Aadi month plowing begins in Dharmapuri
author img

By

Published : Jul 16, 2020, 6:38 PM IST

தருமபுரி மாவட்டம், சிறுதானியங்கள் அதிகம் பயிரிடும் மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில் அதிக அளவு விவசாய நிலங்கள், மேட்டுப்பகுதியில் உள்ள காரணத்தால், இங்குள்ள விவசாயிகள் அதிக அளவு சிறு தானியங்களைப் பயிரிட்டு வருகின்றனர்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் பரவலாக, மழை பெய்த காரணத்தால் பாலக்கோடு, காரிமங்கலம், எட்டிமரத்துபட்டி, பெரியாம்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் நிலங்களை ஏர் உழுது, சமன்படுத்தி விதை விதைப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. ஆடிப்பட்டத்தில் விதை விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.

அதன்படி ஆடி மாதம் ஒன்றாம் தேதியான இன்று (ஜூலை 16) மழை பெய்துள்ளதால் விவசாயிகள் சோளம், கேழ்வரகு, அவரை, துவரை, உளுந்து போன்ற சிறுதானியங்களின் விதை விதைப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவும் காலகட்டத்தில், சமீபகாலமாக பெய்த மழை விவசாயிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

இதையும் படிங்க: சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை - விஜய் சேதுபதி பட நடிகர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.