கரூர் மாவட்டம், வெள்ளியணைப் பகுதி அடுத்த மணவாடி பகுதியைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் நேற்று முன்தினம்(ஆக.31) தவிட்டுபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, தினேஷ் என்ற (வயது 26) இளைஞர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட இளைஞர்கள், அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் இளைஞரின் உடலைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், இளைஞரின் உடல் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தற்போது, அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து நீச்சல் பயிற்சியில் சிறப்புப் பெற்ற தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, நீரில் மாயமான இளைஞரின் உடலை இரண்டாவது நாளாகத் தேடினர்.