மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்ந நாளில் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பது வழக்கம்.
அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் கல்வித்துறையில் சிறந்து விளங்கிய தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் என ஒன்பது பேருக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று (செப்.8) நல்லாசிரியர் விருது வழங்கினார்.
மேலும் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.