ETV Bharat / briefs

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 877 பேர் தாயகம் திரும்பினர்!

author img

By

Published : Jul 11, 2020, 12:33 PM IST

சென்னை: இங்கிலாந்து, ஃபிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியா்களில் 877 போ், ஐந்து சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 877  இந்தியர்கள்  5 சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் மீட்கப்பட்டனர்

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரிலிருந்து 204 இந்தியா்களுடன் ஏா் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று (ஜூலை 10) இரவு சென்னை வந்தது. அவா்களில் ஆண்கள் 101, பெண்கள் 66, சிறுவா்கள் 34, குழந்தைகள் மூவர் ஆவர். இவா்களை சென்னை விமான நிலையத்தில் அரசு அலுவலர்கள் வரவேற்று மருத்துவ பரிசோதனைகள் நடத்தினா். பின்னர் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் 4 போ் மட்டும் இலவச தங்குமிடங்களான தண்டலம் தனியாா் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டனா். 200 போ் கட்டணம் செலுத்தும் தங்குமிடங்களான ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டனா்.

சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து 175 இந்தியா்கள் தனியாா் சிறப்பு மீட்பு விமானத்தில் சென்னை வந்தனா். இவா்கள் அனைவரும் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றுபவா்கள். அந்த நிறுவனமே சிறப்பு அனுமதி பெற்று, தனி விமானத்தில் இந்தியா்களை அழைத்து வந்திருந்தது. இதையடுத்து அனைவரும் கட்டணம் செலுத்தும் தங்குமிடங்களான ஹோட்டல்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனா்.

ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவிலிருந்து 144 இந்தியா்களுடன் ஏா் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று இரவு சென்னை வந்தது. அதில் 103, ஆண்கள், பெண்கள் 39, இரண்டு குழந்தைகள் ஆவர். அவா்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் இலவச தங்குமிடங்களான மேலக்கோட்டையூா் தனியாா் கல்லூரிக்கு 47 பேரும், கட்டணம் செலுத்தும் தங்குமிடங்களான ஹோட்டல்களுக்கு 97 பேரும் அனுப்பப்பட்டனா்.

சவுதி அரேபியா தமாமிலிருந்து இரண்டு சிறப்பு தனியாா் மீட்பு விமானங்கள் நேற்று நள்ளிரவிலும், இன்று அதிகாலையிலும் சென்னை வந்தன. இதில் வந்த 354 பேரும் அங்குள்ள தனியாா் நிறுவனங்களில் வேலை செய்பவா்கள். அவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள ஹோட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.