கன்னியாகுமரி மாவட்டத்தில், திருடுபோன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கலந்துகொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டரை மாதங்களில் 25 கஞ்சா தொடர்பான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அதில் தொடர்புடைய 45 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்ட 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3 கஞ்சா வியாபாரிகள், 5 ரவுடிகள் என 8 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இரவு ரோந்துப் பணியில் காவல் அலுவலர்கள், காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு அவர்களது தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காவலர்களில் எண்ணுக்கோ அல்லது 100-க்கோ அழைத்தால் காவல் துறையினர் உதவி உடனடியாக கிடைக்கும்" எனக் கூறினார்.