ராமநாதபுரத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று புதியதாக ராமநாதபுரம் மஞ்சனமாரியம்மன் தெருவைச் சேர்ந்த 40 வயது பெண், மணலூரைச் சேர்ந்த 35 வயது பெண், 54 வயது பெண் என மூன்று பெண்களுக்கும் 17 வயது சிறுவன், 51 வயது ஆண், மணலூரைச் சேர்ந்த 43 வயது ஆண், 40 வயது ஆண் என மொத்தமாக 7 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.
இவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை, பரமக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிப்பட்டுள்ளனர். இதுவரை கரோனாவால் 126 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை, வருவாய்த் துறையினர் கிருமி நாசினி தெளித்தனர். மேலும் நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகமாவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.