கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல தளர்வுகளுடன் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளின் அடிப்படையில் கடந்த மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கிய போதிலும், சர்வதேச விமான சேவைக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.
இதனால் உலகின் பல்வேறு நாடுகளிலும் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, மத்திய அரசு ’வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு 10 மணிக்கு லண்டனிலிருந்து சென்னைக்கு வந்த ஏா்இந்தியா சிறப்பு விமானத்தில் 46 பெண்கள் உள்பட 154 தமிழர்கள் மீட்கப்பட்டனர். நள்ளிரவு 12.30 மணிக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 39 பெண்கள், 11 சிறுவா்கள் உள்பட 148 போ் மீட்கப்பட்டனர்.
அதிகாலை மூன்று மணிக்கு குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில், 32 பெண்கள், ஒன்பது சிறுவா்கள் உட்பட 175 பேர் மீட்கப்பட்டனர். இன்று காலை ஆறு மணிக்கு துபாயிலிருந்து தனியாா் மீட்பு விமானம் மூலம் 175 பேர் சென்னை வந்தடைந்தனர்.
இவர்கள் அனைவரிடமும் சுங்கச் சோதனை, கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தனியார் விடுதிகளிலும், அரசு அமைத்துள்ள கரோனா முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு மாநகராட்சியின் கண்காணிப்பில் உள்ளனர்.
இதையும் படிங்க : 'மக்கள் மனதில் பீதியை கிளப்பவே ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார்'