தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 250-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று (ஜூலை9) மட்டும் வட்டாட்சியர் உள்பட 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்று பாதித்தவர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து வட்டாட்சியர் பணிபுரிந்து வந்த தாலுகா அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனைத்து அறைகளும் தற்காலிகமாக மூடப்பட்டு பொதுமக்கள் பயன்பாடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
வட்டாட்சியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர்கள், அலுவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:திருமணிமுத்தாறில் சாயப்பட்டறை கழிவுநீர் கலப்பு - விவசாயிகள் வேதனை