ராமநாதபுரம் மாவட்டத்தில், கரோனா தொற்றால் 3 ஆயிரத்து 338 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,400 ஆக உயர்ந்துள்ளது.
பாதிப்பாளர்கள் அனைவரும் ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனை, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரோனாவால் 69 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், இன்று மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதுவரை மொத்தம் 72 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.