ETV Bharat / briefs

கரோனா பாதிப்பு: தேனாம்பேட்டையில் 6 ஆயிரமாக அதிகரிப்பு! - கரோனா எண்ணிக்கை

சென்னை: தேனாம்பேட்டை பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாயிரமாக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பு: தேனாம்பேட்டையில் 6 ஆயிரமாக உயர்வு!
Thenampet corona cases
author img

By

Published : Jun 29, 2020, 1:40 PM IST

கரோனா தொற்று தமிழ்நாடு முழுவதும் அதிக அளவில் பரவிவருகிறது. குறிப்பாக சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், திருவிக நகர் போன்ற இடங்களில் அதன் தாக்கம் அதி தீவிரமாக உள்ளது. இதன் பரவலைத் தடுக்க மாநகராட்சி இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறது.

ஏற்கனவே ராயபுரம் தண்டையார்பேட்டை பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆறாயிரத்தைக் கடந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது தேனாம்பேட்டையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆறாயிரமாக அதிகரித்துள்ளது.

15 மண்டலங்களில் ராயபுரத்தில் அடுத்தபடியாக இறப்பு எண்ணிக்கை கொண்டது தேனாம்பேட்டை. இந்தப் பரவலைத் தடுக்க தேனாம்பேட்டையில் மாநகராட்சி சார்பில் அதிக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் 15 மண்டலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி,

ராயபுரம் - 7659 நபர்கள்

தண்டையார்பேட்டை - 6393 நபர்கள்

தேனாம்பேட்டை - 6033 நபர்கள்

கோடம்பாக்கம் - 5578 நபர்கள்

அண்ணா நகர் - 5740 நபர்கள்

திருவிக நகர் - 4505 நபர்கள்

அடையாறு - 3290 நபர்கள்

வளசரவாக்கம் - 2460 நபர்கள்

அம்பத்தூர் - 2149 நபர்கள்

திருவொற்றியூர் - 2123 நபர்கள்

மாதவரம் - 1761 நபர்கள்

ஆலந்தூர் - 1352 நபர்கள்

பெருங்குடி - 1166 நபர்கள்

சோழிங்கநல்லூர் - 1151 நபர்கள்

மணலி - 920 நபர்கள்

என மொத்தம் 15 மண்டலங்களில் 53 ஆயிரத்து 762 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.