நேற்று மாலை (ஜூலை 28) ஓமன் நாட்டின் மஸ்கட் நகரிலிருந்த 163 இந்தியர்கள், நள்ளிரவு பிலிப்பைன்சிலிருந்து 143 இந்தியர்கள், அதிகாலை அபுதாபியிலிருந்து 167 இந்தியர்கள் என 473 பேர் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
அனைவரையும் அரசு அலுவலர்கள் மலர் கொத்து அளித்து வரவேற்றனர். பின்னர், அவர்களைத் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைத்தனர். 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின் தொற்று இல்லை என்று உறுதியானவர்கள் மட்டும் இம்மையங்களிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள்.