திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 872ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 2 ஆயிரத்து 345 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 61 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், 56 ஆயிரத்து 373 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டு 1131 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். மேலும், 2 ஆயிரத்து 500 பேர் அவரவர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.