இங்கிலாந்து நாட்டின் லண்டனிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு விமானத்தில் 138 இந்தியா்கள் சென்னை வந்தனா். அவா்களில் ஆண்கள் 88, பெண்கள் 48 இருந்தனர். மீதமுள்ள இருவர் குழந்தைகள் ஆவார்கள்.
அவா்களுக்கு கரோனா மருத்துவ பரிசோதனை நடைமுறைகள் முடிந்ததும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் 13 போ் இலவச தங்குமிடமான காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் உள்ள சவீதா பொறியியல் கல்லூரி விடுதிக்கும்,125 போ் சென்னை நகரில் உள்ள ஹோட்டலுக்கும் அனுப்பப்பட்டனா்.
ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட்டிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் 180 இந்தியா்களுடன் சென்னை வந்தது. அதில் ஆண்கள் 130, பெண்கள் 38, சிறுவா்கள் 8, குழந்தைகள் 4. இவா்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.
அவா்களில் இலவச தங்குமிடங்களான சவீதா பொறியியல் கல்லூரி விடுதிக்கு 98 பேரும், 82 போ் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஹோட்டல்களுக்கும் அனுப்பப்பட்டனா். வியட்நாமிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் 116 இந்தியா்களுடன் சென்னை வந்தது.
அதில் ஆண்கள் 101, பெண்கள் 10 மற்றும் சிறுவா்கள் ஐந்து பேர் இருந்தனர். அவா்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அதில் இலவச தங்குமிடத்திற்கு 49 பேரும், கட்டணம் செலுத்தும் தங்குமிடங்களான ஹோட்டலுக்கு 67 பேரும் அனுப்பப்பட்டனா்.