வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களில் 406 போ் மீட்கப்பட்டு நான்கு சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
ஜொ்மனில் உள்ள பிராங்க்பாா்ட் நகரிலிருந்து 56 பேரும், மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து 144 பேரும், மலேசியாவில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றும் 104 பேரும், ஓமன் நாட்டின் மஸ்கட் நகரிலிருந்து 178 பேரும், இலங்கையிலிருந்து 28 பேரும் இந்தியா வந்தடைந்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இவர்களுக்கு அலுவலர்கள் மலர்கொத்து கொடுத்து வரவேற்று, சென்னை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னர், இலவச தங்குமிடம் மற்றும் கட்டணம் செலுத்தும் தங்குமிடங்களான ஹோட்டல்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.