மதுரை மாவட்டம் தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை கரோனா சிகிச்சை மையமாக மீண்டும் இயங்கி வருகிறது.இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட 26 ஆண்கள்,10 பெண்கள் உள்பட 36 பேர் இன்று( ஏப்ரல் 22) அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும் 13 ஆண்கள், 7 பெண்கள் உள்பட 20 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
தற்போது வரை 166 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை முதன்மை மருத்துவர் காந்திமதி நாதன் தெரிவித்துள்ளார்.