விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே ஏழு ஆயிரத்து 258 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ள நிலையில் இன்று (ஜூலை30) மேலும் 244 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழு ஆயிரத்து 502 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நான்கு ஆயிரத்து769 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், இரண்டு ஆயிரத்து 654 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இத்தொற்றின் காரணமாக இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 79 ஆக அதிகரித்துள்ளது.