உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐந்தாவது முறையாக இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. சரியாக 20 வருடங்களுக்கு முன்பு, உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது.பல்வேறு சாதனைகள், சர்ச்சைகள் இந்தத் தொடரில் நிகழ்ந்திருந்தது. இருப்பினும், தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியை ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாது.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி பிர்மிங்ஹாம் மைதானத்தில் ஜூன் 17 1999இல் நடைபெற்றது.
உலகக்கோப்பை வரலாற்றிலேயே இதுபோன்று ஒரு போட்டி முடிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 213 ரன்கள் மட்டும்தான் அடித்தது . இதைத்தொடர்ந்து, 214 ரன்கள் இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் தேவைப்பட்டன.
![RSA vs Aus](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3587926_kl.jpg)
அப்போது, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் டேமியன் பிளெமிங் வீசிய கடைசி ஓவரின் முதலிரண்டு பந்துகளையும் தென்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் லான்ஸ் க்ளூஸ்னர் பவுண்டரிக்கு பறக்கவிட்டார். இதனால், தென்னாப்பிரிக்கா அணி இப்போட்டியில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அங்குதான் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்...
பிளெமிங் வீசிய மூன்றாவது பந்தை வீணடித்தார் க்ளூஸ்னர். இதனால், வெறுப்படைந்த க்ளூஸ்னர், அடுத்த பந்தை மிட் ஆஃப் திசையில் அடித்தவுடன் ரன் எடுக்க ஓடத் தொடங்கினார்.ஆனால், நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த டொனால்டு, ரன் ஓடுவதை மறந்து பந்து எங்கே செல்கிறது என்பதில்தான் கவனம் செலுத்தினார்.
பின், க்ளூஸ்னர் தன் அருகே வந்ததையடுத்து, டொனால்டு ரன் ஓட முயற்சித்தார். ஆனால், அதற்குள் ஆஸ்திரேலிய வீரர்கள் தட்டுத்தடுமாறி அவரை ரன்அவுட் செய்தனர்.இதனால், போட்டி டையில் முடிந்திருந்தாலும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்காவை விட நெட் ரன்ரேட் முறையில் முன்னிலை பெற்றிருந்ததால், இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
-
#OnThisDay 20 years ago. pic.twitter.com/fgZdvE2bbS
— Cricket World Cup (@cricketworldcup) June 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#OnThisDay 20 years ago. pic.twitter.com/fgZdvE2bbS
— Cricket World Cup (@cricketworldcup) June 17, 2019#OnThisDay 20 years ago. pic.twitter.com/fgZdvE2bbS
— Cricket World Cup (@cricketworldcup) June 17, 2019
டொனால்டு செய்த தவறினால், தென்னாப்பிரிக்கா அணியின் உலகக்கோப்பை கனவு வீணாய் போனது. அவர்களது ரசிகர்கள் போட்டியின் முடிவை எண்ணி சோகத்தில் இருந்தனர். ஒருவேளை டொனால்டு மட்டும் சரியாக ஓடியிருந்தால், உலகக்கோப்பை வரலாறே மாறியிருக்கும். அவர்களுக்கு சோக்கர்ஸ் என்ற பெயரும் கிடைத்திருக்காது.உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கான தொடக்கப்புள்ளி அமைந்திருக்காது.
வரலாற்றை நினைவுகூறதான் முடியுமே தவிர, அதை மாற்ற முடியாது. இச்சம்பவம் நடைபெற்று இன்றோடு 20 வருடங்கள் நிறைவடைந்திருந்தாலும், தென்னாப்பிரிக்க வீரர்கள் மனதில் அது ஆறாத வடுவாக இருக்கிறது.