சென்னை மண்ணடி மெட்ரோ அருகில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கறுப்பு நிற பையை கையில் கொண்டு இளைஞர் ஒருவர், தெருவில் நடந்து சென்றுள்ளார்.
அவரை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரிக்கும் போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
இதைத் தொடர்ந்து, பணத்திற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் அந்த இளைஞரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில், அவர் தூத்துக்குடி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட மொய்தீன் தம்பி (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் வசித்து வந்த வீட்டில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதில் அங்கிருந்து சுமார் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், பணம் கணக்கிடும் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
அவரிடம் கைப்பற்றப்பட்ட மொத்தம் 17 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் குறித்து, எஸ்பிளனேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மருந்து வாங்கச் சென்றவரின் வாகனத்தை பறிமுதல் செய்த உதவி ஆய்வாளர்!