ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக கீழக்கரை, பரமக்குடி பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நேற்று (ஜூலை 4) ராமநாதபுரம், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், கமுதி என மாவட்டம் முழுவதும் 125 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே பாதிக்கப்பட்டோர் 1,143ஆக இருந்து வருகிறது. மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முதுகுளத்தூரைச் சேர்ந்த 55 வயது ஆண் மற்றும் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 49 வயது ஆண் உயிரிழந்தனர். எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்தது.