தஞ்சாவூர் மாவட்டத்தை பொருத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 123 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 3 லட்சத்து 97 ஆயிரம் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 986 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
அதில், இன்று ஒரே நாளில் மட்டும் தஞ்சையில் 123 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள 795 பேர் தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 106 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.