திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (23-06-2020) ஒரே நாளில் 120 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 645ஆக உயர்ந்துள்ளது. இதில் பூரண குணமடைந்த ஆயிரத்து 427 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
ஆயிரத்து 176 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை கரோனா தொற்றால் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் அம்மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் போதிய இட வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூர் ஊராட்சி டி.டி.மருத்துவக் கல்லூரியில் கரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு குடிநீர், கழிவறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னதாக நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில், பூண்டி ஒன்றிய வட்டாட்சியர் அலுவலர் வெங்கடேசன், திருவள்ளூர் வட்டாட்சியர் விஜயகுமாரி உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க : குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கைதிக்கு கரோனா பாதிப்பு!-