ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 5,489 பேருக்கு கரோனா பாதிப்பு; 66 பேர் உயிரிழப்பு!

TN CORONA BREAKING
TN CORONA BREAKING
author img

By

Published : Oct 4, 2020, 6:14 PM IST

Updated : Oct 4, 2020, 9:34 PM IST

17:36 October 04

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 5,489 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கை

இதுகுறித்து மக்கள் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள 189 பரிசோதனை மையங்களின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், தமிழ்நாட்டிலிருந்த 5,482 பேருக்கும், பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய ஏழு பேருக்கும் என மொத்தம் 5,489 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 77 லட்சத்து 11 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 6 லட்சத்து 19 ஆயிரத்து 996 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாம்களில் 46 ஆயிரத்து 120 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5558 நபர்கள் குணமடைந்து இன்று வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 64 ஆயிரத்து 92 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று (அக். 4) ஒரே நாளில் அதிகபட்சமாக 66 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,784ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு சமமான அளவிற்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மாவட்ட வாரியாக இன்றைய (அக். 4) பாதிப்பு

  • சென்னை - 1348
  • செங்கல்பட்டு -381
  • திருவள்ளூர் - 197
  • மதுரை- 82
  • காஞ்சிபுரம் - 146
  • விருதுநகர் - 58
  • தூத்துக்குடி - 53
  • திருவண்ணாமலை - 104
  • வேலூர் - 140
  • திருநெல்வேலி - 76
  • தேனி - 60
  • ராணிப்பேட்டை -71
  • கன்னியாகுமரி - 117
  • கோயம்புத்தூர் - 474
  • திருச்சிராப்பள்ளி- 68
  • கள்ளக்குறிச்சி - 30
  • விழுப்புரம் - 59
  • சேலம் - 357
  • ராமநாதபுரம் - 22
  • கடலூர்- 141
  • திண்டுக்கல் - 48
  • தஞ்சாவூர் - 242
  • சிவகங்கை - 36
  • தென்காசி - 35
  • புதுக்கோட்டை - 72
  • திருவாரூர் - 148
  • திருப்பத்தூர் - 80
  • அரியலூர் - 41
  • கிருஷ்ணகிரி -73
  • திருப்பூர் -147
  • தர்மபுரி - 59
  • நீலகிரி - 122
  • ஈரோடு - 149
  • நாகப்பட்டினம் -20
  • நாமக்கல் -165
  • கரூர் -52
  • பெரம்பலூர் -11

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - ஐந்து பேர் என மொத்தம் 5489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க...

Last Updated : Oct 4, 2020, 9:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.