சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீமானின் உடல்நலம் பாதித்ததால் அவரது தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர். அவரது உடல்நலம் குறித்து மருத்துவ நிர்வாகம் தகவல் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று இரவு வீடு திரும்புவார் என தெரிகிறது.
இதையும் படிங்க: தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கரோனா