ETV Bharat / city

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு - தியேட்டர்களுக்கு அனுமதி - Theatres open in Tamil Nadu

ஊரடங்கு நீட்டிப்பு
ஊரடங்கு நீட்டிப்பு
author img

By

Published : Aug 21, 2021, 6:12 PM IST

Updated : Aug 21, 2021, 7:36 PM IST

18:09 August 21

தமிழ்நாட்டில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பது, பத்து, 11, 12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கல்லூரிகளும், பாலிடெக்னிக் கல்லூரிகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்

  • ஆகஸ்ட் 23ம் தேதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்படலாம்
  • கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி; இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்
  • இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க அனுமதி
  • தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி
  • ஒன்று முதல் எட்டு வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை
  • ஐடி நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
  • ஆந்திர பிரதேசம், கர்நாடாக ஆகிய மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

இதையும் படிங்க: செப்டம்பரில் பள்ளிகள் திறப்பது உறுதி - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Last Updated : Aug 21, 2021, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.