பிகார் மாநில முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ் குமாருக்கு கரோனா நோய்க் கிருமி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜூலை 4ஆம் தேதி இவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் இருந்த தலைவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் அலுவலகம், வீட்டில் உள்ளவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ஒரு காவலருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதியானது. ஆனால் முதலமைச்சர் நிதீஷ் முகாருக்கு தொற்று இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் இன்று நடத்திய பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.