தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 19) புதிதாக 105 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஒரேநாளில் 50 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.