டெல்லி: இந்தியாவில் மக்களுக்கு மேலும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் கரோனா வைரஸ் தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கிடையில் இன்று அகமதாபாத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலாவின் கரோனா தடுப்பூசியான ZyCoV-D இன் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தடுப்பூசிக்கான முதல் இரண்டு கட்ட பரிசோதனைகளில் இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த மருந்து பாதுகாப்பானது மற்றும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது என்பதை பரிசோதனைகளின் முடிவுகளில் தெரிகிறது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த இடைக்கால தரவுகளை மதிப்பாய்வு செய்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 26 ஆயிரம் இந்திய பங்கேற்பாளர்களில் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்த மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதி அளித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி!