அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீர் யூனியன் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஜன்ங்லாட் மண்டி என்ற பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில் இன்று (மே3) காலை ஈத் அல் பிதர் (ரம்ஜான்) சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் ஈடுபட்டிருந்தனர்.
இந்த தொழுகை முடிந்து அவர்கள் வீடு திரும்பினர். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் பாதுகாப்பு பணியில் நின்றிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த நிலையில் போலீசார் பேரிகார்டுகள் அமைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
மேலும் அமைதி நிலவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ரம்ஜான் தினத்தில், ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎஃப் மற்றும் மாநில காவலர்கள் மீது சில இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிவு!