கர்நாடகா மாநிலம், ராமங்கரா பகுதியில் டாடா சுமோவில் சுமார் 8 பேர், மைசூர் நோக்கி நண்பரின் திருமணத்திற்காகச் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது சன்னபட்னா அருகே தேநீர் கடையில், இறங்கி தேநீர் குடித்துக் கொண்டு இருந்தபோது, எதிர்பாராதவிதமாக, அவ்வழியாக வந்த லாரி இவர்கள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே விஜய், பிரதீப், மதன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இருவர் உயிரிழக்க, மீதமுள்ள மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சன்னபட்னா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.