டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தெஹ்ரி ஏரிக்கு இடையே உள்ள டோப்ரா-சாந்தி தொங்கு பாலத்தில் இளைஞர் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஏரியில் விழுந்தார். இதை பாலத்தில் சீரமைப்பு பணிகளை கவனித்துவரும் ஊழியர்கள் கண்ட உடன் போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீயணைப்புத்துறை அலுவலர்களுடன் சம்பவயிடத்துக்கு விரைந்து வந்து படகு மூலம் இளைஞரை காப்பாற்றினர். இதனிடையே அவர் 25 நிமிடங்களாக ஏரியில் தத்தளித்துள்ளார். முதல்கட்ட தகவலில், அந்த இளைஞர் பிரதாப்நகரில் வசிக்கும் அஜய் ராஜ் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: 4ஆவது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் தந்தை எடுத்த விபரீத முடிவு